சேரன்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால்அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும்வஞ்சியையும்தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்[1] ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்

தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).google.com, yahoo.com, google analytics, weebly.com