பாண்டியன் தமிழ் பேரரசன்

பாண்டிய நாடுஇந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று.இங்கு பாண்டியர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

பாண்டியரின் தோற்றம்

சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 7000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறியபடி

"முன்னீர் விழவின் நெடியோன்

நன்னீர் மணலினும் பலவே" (புறம் - 9)

அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர் பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால்தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது.

பாண்டியரைப் பற்றிய பதிவுகள்
இராமாயணத்தில்பாண்டிய மன்னர்களின் தலைநகர் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.
மகாபாரதத்தில்திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.
அசோகனின் கல்வெட்டுக்களில்மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய அரசன் அசோகன் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
மகாவம்சத்தில்இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.
பிற நாட்டவர் பதிவுகள்கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற யவன நாட்டுத்தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. "'கொக்கிளிசுக்குப் பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 'பிளைனி' என்ற மேனாட்டான் தமிழகத்தைக் காண வந்தான்.அவனது பயண நூலில் பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின் தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு சாதி மக்கள் இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண் பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய நாட்டை ஆளும் உரிமை கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை வைத்திருந்தாள்.அவளது மரபினர் தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார் பிளைனி.
சங்க காலப் பதிவுகள்பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள்சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
இமயம்வரை பாண்டியரின் ஆட்சிமலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரைதமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள்.இவளது வழிமுறையினரே மௌரியர்கள்.அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.


பாண்டிய நாட்டில் பிற நாட்டவர்


ஆட்சிவடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் கி.பி. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும்,சேர,சோழ,பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர்.களப்பிரரைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 600-700 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது.நாட்டை ஆண்ட நாடார்கள் மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலை நிறுத்தினர்.இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.

பாண்டியர் ஆட்சி இயல்

நாட்டியல்தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றையமதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம்,கன்னியாகுமரி,புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர்,கூற்றம்,மண்டலம்,நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.

"முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு" (புறம்-110)

"வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே" (புறம்-242)

என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.

பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும் ஊர்கள் கூற்றம்,நாடுகளில் அமைந்தன.


அரசியல் ஆட்சி இயல்பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள்.அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.

1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சிற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.

2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.

3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.

4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.

பாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர். அவை வருமாறு:-

அரையன்பேரரையன்விசையரையன்தென்னவன் பிரமராயன்தென்வன் தமிழவேள்காவிரிஏனாதிபஞ்சவன் மாராயன்பாண்டிய மூவேந்தவேளான்செழிய தரையன்பாண்டிப் பல்லவதரையன்தொண்டைமான்பாண்டிய கொங்கராயன்மாதவராயன்வத்தவராயன்குருகுலராயன்காலிங்கராயன்காவிரி,ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ,மோதிரம்,இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.
அரசின் வரிபாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர்.விளைநெல்,காசு,பொன்வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள் இதுவேயாகும்.
நில அளவியல்ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல்நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
இறையிலிஇறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.சைன,பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது.அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்குமுற்றூட்டும்,சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.
அளவை இயல்எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன.எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும்.பொன்,வெள்ளி,கழஞ்சு,காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர்,சர்க்கரை,காய்கறிகள்,புளி ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால் நிறுத்தனர்.சேர் ,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன.நெல்,அரிசி,உப்பு,நெய்,பால்,தயிர்,மிளகு,சீரகம்,கடுகு ஆகியன செவிடு,ஆழாக்கு,உழக்குஉரி,நாழிகுறுணி போன்ற முகக்கும் கருவிகளால் அளக்கப்பட்டன்.
எடுத்தல் அளவை

10 கர்ணம் - 1 கழஞ்சு
100 பலம் - 1 துலாம்
முகத்தல் அளவை

5 செவிடு - ஒரு ஆழாக்கு
2 ஆழாக்கு - ஒரு உழக்கு
2 உழக்கு - ஒரு உரி
2 உரி - ஒரு நாழி
6 நாழி - ஒரு குறுணி
16 குறுணி - ஒரு கலம்
இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன,சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இவ்வளவு முறை புழக்கத்தில் இருந்திருக்கின்றது.14 ஆம் நூற்றாண்டு முதல் புதிய அளவு முறைகள் வந்தன குறிப்பிடத்தக்கது.
நாணய இயல்பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன்,செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.

சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊரவைபாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது.ஊராட்சியினை இது செயல்பட வைத்தது.குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர்.நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடுயும்.ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன.அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது.நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன.வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன. அவை பின்வருமாறு:-

சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.
ஏரிசவாரியம் - நீர் நிலை,பாசனம் கண்காணிப்பது.
தோட்ட வாரியம் - நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.
பொன் வாரியம் - நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.
பஞ்சவாரியம் - குடிமக்களிடம் வரிபெற்று அரசுக்கு அளிக்கப்படுவது.
அவை உறுப்பினர் பெருமக்கள்,ஆளுங்கணக்கர் என்றழைக்கப்பட்டனர்.இவர்கள் ஓராண்டு ஊதியமின்றி பணிபுரிவர்.ஊர் மன்றங்களிலும்,கோயில் மண்டபங்களிலும் ஊரவை கூடும்.புதிய விதிகளை அமைக்கும் உரிமை ஊரவைக்கு இருந்தது. மருதனிள நாகனார்,

"கயிறு பிணிக் குழிசியோலை கொண்டமர்

பொறிகண்டழிக்கு மாவணமாக்களின்"

என்று (அகம்-77) அகப்பாட்டில் கூறியுள்ளார்.இவ்வரிகளில் கூறியபடி பாண்டியர் காலத்தில் குடவோலை முறை இருந்தது என்பதனை அறியலாம்.நெல்லையில் மானூரில் கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணக்களரி இயல்பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது.ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது.இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர். இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை,பரப்பு,நான்கெல்லை குறிக்கப்படும்.விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும்,ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு.ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும்,சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன.மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.google.com, yahoo.com, google analytics, weebly.com